தமிழக அரசின் சார்பில் 2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவோரின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக தொண்டு செய்து வருவோர், தமிழ் அமைப்பை ஏற்படுத்தி மொழிக்காக பாடுபடும் ஆர் வலர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 'தமிழ்ச் செம்மல்' விருதுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒருவர் என்ற வகையில் விருதாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் 2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவோர் விவரம்: சென்னை மாவட்டம் ஜெ.வா.கருப்புசாமி, திருவள்ளூர்- வேணு புருஷோத்தமன் , காஞ்சிபுரம் முனைவர் சு.சதாசிவம், வேலூர்- மருத்துவர் சே.அக்பர் கவுஸர், கிருஷ்ணகிரி மா.முருக்குமரன், திருவண்ணாமலை- முனைவர் இரா.வெங்கடேசன் விழுப்புரம்- பரிக்கல் ந.சந்திரன், கடலூர்- முனைவர் ஜா.இராஜா, பெரம்பலூர்- முனைவர் அ.செந்தில்குமார் என்கிற தமிழ்க்குமரன், அரியலூர்- முனைவர் சா.சிற்றரசு, சேலம்- கவிஞர் பொன்சந்திரன்.
தருமபுரி - பாவலர் பெரு. முல்லையரசு, நாமக்கல்- ப.முத்துசாமி, ஈரோடு - முனைவர் கா.செங்கோட்டையன், கரூர்- சி.கார்த்திகா, கோயம்புத்தூர்- எம்.ஜி.அன்வர் பாட்சா, திருப்பூர்- முனைவர் துரை அங்குசாமி, நீலகிரி ம.பிரபு, திருச்சி- சோம வீரப்பன், புதுக்கோட்டை-ஜீவி (ஜீ.வெங்கட்ராமன்), சிவகங்கை- இரா.சேதுராமன், தஞ்சாவூர்- பழ.மாறவர்மன், திருவாரூர்- இராம.வேல்முருகன், நாகப்பட்டினம் - மா. கோபால்சாமி, இராமநாதபுரம்-ஆ.முனியராஜ், மதுரை- முனைவர் போ.சத்தியமூர்த்தி, திண்டுக்கல்- தா.தியாகராசன், தேனி- த.கருணைச்சாமி, விருதுநகர்- கவிஞர் சுரா என்கிற சு.இராமச்சந்திரன், திருநெல்வேலி- வீ.செந்தில்நாயகம். தூத்துக்குடி- ச.காமராசு (முத்தாலங்குறிச்சி காமராசு), கன்னியாகுமரி - பா.இலாசர் (முளங்குழி பா.இலாசர்), திருப்பத்தூர்- முனைவர் ச.சரவணன், செங்கல்பட்டு- நந்திவரம் பா.சம்பத்குமார், ராணிப்பேட்டை- கவிஞர் பனப்பாக்கம் கே.சுகுமார், தென்காசி- மு.நாராயணன்,கள்ளக்குறிச்சி- சி.உதியன், மயிலாடுதுறை - துரை குணசேகரன்.
0 கருத்துகள்