15வது ஆண்டு விழா உலகளாவிய சிறுகதைப் போட்டி 2021

பண்ணாகம்.கொம் இணையத்தளத்தின் 15வது ஆண்டு நிறைவை 2021 சித்திரை மாதம் கொண்டாடுவதை

முன்னிட்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி நடாத்தப்படவுள்ளது. ஜேர்மனியில் இயங்கி வருகின்ற

பண்ணாகம்.கொம் இணையத்தளம் உலகத் தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் நோக்கில் இந்த பெரு முயற்சி

எடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு போட்டி விதி முறைகளைப் பின்பற்றியே கதைகள் எழுதப்படவேண்டும்.

சிறுகதைப் போட்டி விதிகள்

1. சிறுகதைகள் யாவும் சமூகம் நோக்கிய நற்சிந்தனை உள்ளதாக இருக்க வேண்டும்.

2. அரசியல், தனிநபர் சாடல்கள், ஒரு கட்சி சார்பு அல்லாததாக இருக்க வேண்டும்.

3. இப்போட்டிக்கு வயதுக்கட்டுப்பாடு இல்லை. சிறந்த கதை ஆசிரியர் மூவருக்கு பணப்பரிசும், சிறுகதையாளருக்கானச் சிறந்த பட்டமும் மற்றும் பங்கு பற்றிய அனைவருக்கும் மின் இதழ் சான்றிதழும் வழங்கப்படும்.

4. ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் A4 தட்டச்சு தாளில் ஒன்றரைப்பக்கம் மட்டும்

கதையாக அனுப்பலாம். நீண்ட கதைகள் தவிர்க்கப்படும். படைப்புகளுடன் தங்களது நிழற்படம் மற்றும் அலைபேசி எண் பதிவு செய்யப்படவேண்டும், கதைகள் யூனிகோட் அல்லது பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும். கதைகள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி. [email protected] அல்லது [email protected]

6. சிறுகதை ஆசிரியரின் பெயர், முகவரி ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். உலக

நாட்டிலிருந்து பங்கேற்போர் தங்கள் முகவரியை ஆங்கிலத்தில் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

7. கதைகளுடன் கதைகள் எனது சொந்தக் கற்பனையில் உருவான புனைவுகளே. அவை தழுவலோ,

மொழிபெயர்ப்போபிறிதொன்றின் நகலோ அல்ல என்ற உறுதிமொழி இணைக்கப்படவேண்டும்.

8. பங்கேற்கும் படைப்பாளிகள் அவர்கள் அனுப்பும் படைப்புகளை வேறு எங்கும் பிரசுரிக்கும் எழுத்தாளர்கள் அனுப்புவதைத் தவிர்க்கவேண்டும், எல்லா விஷயங்களிலும் பண்ணாகம்.கொம் இணைய ஆசிரிய குழுவின் முடிவே இறுதியானது. உலக எழுத்தாளர்களில் 5 பிரமுகர்கள் நடுவர்களாகப் பணியாற்றுவார்கள்.

10. முடிவு திகதி 21.03.2021 ஞாயிற்றுக் கிழமைக்குப் பிந்தாமல் [email protected] அல்லது [email protected] அனுப்பி வையுங்கள். கதைகள் கிடைக்கும் ஒழுங்கிலேயே ஆண்டு மலரில் பிரசுரிக்கப்படும்.

சிறுகதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் : மார்ச் 21, 2021

பண்ணாகம்.கொம் இணையம், 15வது ஆண்டு விழாக் குழு 2021.

www.pannagam.com



கருத்துரையிடுக

0 கருத்துகள்