நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடி- க. நா. சுப்ரமண்யம் பிறந்த நாள்-ஜனவரி 31

க.நா.சு என்று அழைக்கப்படும் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியன் 1912
ஜனவரி 31 அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானில் பிறந்தார்.
நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், இலக்கிய விமர்சனம்,
மொழிபெயர்ப்பு என எழுதிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடி.
இலக்கியம், கலை, அவை குறித்த தீவிரமான விமர்சனம் ஆகியவற்றுக்கு
முக்கியத்துவம் அளிக்கும் சிற்றிதழ்களை தொடங்கினார். 
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி நன்கு அறிந்திருந்தார். உலக இலக்கியத்துக்கு
இணையாகத் தமிழ் இலக்கியம் பேசப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.
தமிழின் முக்கியமான கதைகளை ஆங்கிலத்திலும் நோபல் பரிசு
பெற்ற ஆங்கில நாவல்களையும் இன்னும் பல ஆங்கிலக் கதைகளையும் தமிழிலும்
மொழிபெயர்த்தவர்.

மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் எழுதினார். ‘சூறாவளி’,
சந்திரோதயம்’, ‘எழுத்து’ உள்ளிட்ட இதழ்கள், ‘ராமபாணம்’, ‘இலக்கிய வட்டம்’,
‘முன்றில்’ உள்ளிட்ட சிற்றிதழ்களை நடத்தினார். தினமும் 7 பக்கங்கள்
எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் சுமார் 15,000 கட்டுரைகள்
எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

க.நா.சுவின் முதல் நாவல் ‘பசி’.‘பொய்த்தேவு’ என்ற நாவல் மிகவும்
புகழ்பெற்றது. ‘இலக்கியத்திற்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கிய விமர்சனக்
கட்டுரை நூலுக்காக 1986-ல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.
இவரது நூல்களை தமிழக அரசு 2006-ம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.
இறுதி மூச்சுவரை முழு நேர எழுத்தாளராகவே செயல்பட்டவர்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளமான பரப்பை வடிவமைத்தவர்களில்
முதன்மையானவராக விளங்கிய க.நா.சு தனது 76-வது வயதில் (1988)
மறைந்தார்.


க. நா. சுப்ரமண்யம்
க. நா. சுப்ரமண்யம்


க. நா. சுப்ரமண்யம் படைப்புக்கள்


புதினங்கள்


அசுரகணம் (1959)
அவதூதர் (1988)
அவரவர் பாடு (1963)
ஆட்கொல்லி (1957)
ஆயுள் தண்டனை
ஏழுபேர் (1946)
ஏழுமலை
ஒரு நாள் (1946)
கந்தர்வ லோகத்தில் கொலை
கருகாத மொட்டு (1966)
கோதை சிரித்தாள் (1986)
கோபுர வாசல்
சக்தி விலாசம்
சத்யாகிரஹி
சமூகச் சித்திரம் (1953)

சர்மாவின் உயில் (1948)

தந்தையும் மகளும்
தாமஸ் வந்தார் (1988)
நடுத்தெரு
நளினி (1959)
நான்கு நாவல்கள் (1955)
பசி (1943)
பட்டணத்து வாழ்வு (1961)
பித்தப்பூ (1987)
புழுதித் தேர்
பெரிய மனிதன் (1959)

பொய்த்தேவு (1966)

மாதவி (1959)
மூன்று நாவல்கள் (1985)
வாழ்ந்தவர் கெட்டால் (1951)
வாழ்வும் தாழ்வும்

அச்சில் வராதவை


திருவாலங்காடு
மால்தேடி
வக்கீல் ஐயா
ஜாதிமுத்து
சாலிவாஹணன்
சாத்தனூர்

சிறுகதை


அழகி முதலிய கதைகள் (1944)
ஆடரங்கு (1955)
இரண்டு பெண்கள் (1965)
க.நா.சு கதைகள் மி, மிமி, மிமிமி (1988)
சாவித்திரி சிறுகதை
சுந்தா பாட்டி சொன்னாள்
தீ! தீ கதைகள்
தெய்வ ஜனனம் (1943)
நாயக்கர் தஞ்சை கதைகள்
பதினேழு கதைகள்
மணிக்கூண்டு (1961)
மராட்டியர் தஞ்சை கதைகள்

கவிதை


க.நா.சு கவிதைகள் (1986)
புதுக் கவிதைகள் (1989)
மயன் கவிதைகள் (1977)

நாடகம்


ஊதாரி (1961)
ஏழு நாடகங்கள் (1944)
கலியாணி
நல்லவர் (1957)
பேரன்பு, கவிதைநாடகம்
மஞ்சளும் நீலமும்
வாழாவெட்டி

மொழிபெயர்ப்பு


அன்பு வழி - ஸ்வீடிஷ் - பேர்லாகர் க்விஸட் (1956)
ஆல்பர்ட் ஷ்வைட்ஸரின் சுயசரிதம் (1958)
உலகின் சிறந்த நாவல்கள் (1959)
எளிய வாழ்க்கை - ஹென்றி டேவிட் தேபரோ (1956)
ஐரோப்பியச் சிறுகதைகள் (1987)
குடியானவர்கள் - போலந்து
தாசியும் தபசியும் - பிரெஞ்சு
நல்ல நிலம் - கெரோல்
நிலவளம் - நார்வேஜியன் - நட்ஹாம்சன்
மதகுரு - போலந்து
மிருகங்கள் பண்ணை - ஜேம்ஸ் ஆர்வெல் - (1956)
விருந்தாளி - பிரெஞ்சு- ஆல்பெர் காம்யூ

விமர்சனக் கட்டுரை


இந்திய இலக்கியம் (1984)
இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் (2002)
இலக்கிய வளர்ச்சி க.நா.சு பார்வையில் (1986)
இலக்கிய விசாரம் (ஒரு சம்பாஷணை) (1959)
இலக்கியச் சாதனையாளர்கள் (1985)
இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984)
உலக இலக்கியம் (1989)
உலகத்தின் சிறந்த நாவல்கள் (1960)
கலை நுட்பங்கள் (1988)
கவி ரவீந்திரநாத தாகுர் (1941)
சிறந்த பத்து இந்திய நாவல்கள் (1985)
தமிழ் இலக்கிய விமர்சகர்கள் (1979)
படித்திருக்கிறீர்களா? (1957)
புகழ்பெற்ற நாவல்கள் (1955) (இரண்டு தொகுதிகள்)
புதுமையும் பித்தமும் (2006)
மனித குல சிந்தனைகள் (1966)
மனித சிந்தனை வளம் (1988)
முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957)
விமரிசனக் கலை (1959)


ஆங்கில நூல்


Contemporary Indian Short Stories (Ed.) (1977)
Contemporary Tamil Short Stories (1978)
Generations (Novel) - Neela Padmanaban (1972)
Movements for Literature
Sons of the Sun (Novel) - Sa.Kandasamy (2007)
The Anklet Story (1977)
The Catholic Community in India (1970)
Thiruvalluvar and His Thirukkural (1989)
பாரதியின் காட்சி (1989)

கருத்துரையிடுக

0 கருத்துகள்