சாதனைப் பெண் விருதுகள் 2021

லிம்ராபேக்ஸ் பிரைவேட் லிமிடெட் வழங்கும் நந்தவனம் பவுண்டேசன்

சாதனைப் பெண் விருதுகள் 2021

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சர்வதேச அளவில் பல்துறை களில் சாதித்து வரும் பெண்களை கௌரவிக்கும் விதமாக நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான சாதனைப் பெண் விருதுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறோம்.

* உலகின் எந்த நாட்டிலிருந்தும் சாதனைப் பெண் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

* சாதனைப் பெண் விருதுக்கு தகுதியானவர்களை அடையாளம் கண்டு பரிந்துரையும் செய்யலாம்.

*கலை இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூக சேவை, தொழில், போன்ற துறைகளில் சாதித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

www.iniyanandavanam.com என்ற இணையதளத்தில் விருதுக்கானவர்கள்
விண்ணப்பிக்க வேண்டும்.

* டிசம்பர் 30.12.2020 க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

* ஜனவரி 2020 கடைசி வாரத்தில் விருதுக்கு தகுதியானவர்கள்களின் பட்டியல் அறிவிக்கப்படும்.

விருது வழங்கும் விழா பற்றிய தகவல்களும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.
விருதுக்கு தகுதியானவர்களை ஐந்துபேர் கொண்ட நடுவர் குழு மட்டுமே தேர்வு செய்யும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்