நல்லழகம்மை - செல்லப்பன் அறக்கட்டளை தமிழ் மரபுக் கவிதைப் போட்டி

நல்லழகம்மை - செல்லப்பன் அறக்கட்டளை சார்பில் தமிழ் மரபுக் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் நூல் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் வெளியானதாகவும், குறைந்த பட்சம் 100 பக்கங்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

போட்டிக்கு மூன்று படிகள் அனுப்ப வேண்டும். நூல்களை வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

சிறந்த கவிதை நூல்களுக்கு

முதல் பரிசு - ரூ.10,000/-

இரண்டாம் பரிசு - ரூ. 7,500/-

மூன்றாம் பரிசு - ரூ.5,000/-

இப்போட்டிக்கான பரிசுத் தொகை 2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சென்னை வாணுவம்பேட்டை, திருவள்ளுவர் இலக்கிய மன்ற ஆண்டு விழாவில் வழங்கப்படும். 

நூல்கள் தேர்வில் நடுவர்கள் தீர்ப்பே இறுதியாகும்.

நூல்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

தலைவர்

திருவள்ளுவர் இலக்கிய மன்றம்

குரு வள்ளுவம்

17, அம்மன் கோவில் தெரு,

வாணுவம்பேட்டை, சென்னை - 600 091.

கருத்துரையிடுக

0 கருத்துகள்