பஞ்சு பரிசில் 2020:
நூல்கள் வரவேற்கப்படுகின்றன. |
பேரா.க.பஞ்சாங்கம் பெயரால் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா மற்றும் அவர் நண்பர்களால் நிறுவப்பட்டுள்ள இப்பரிசில் ஒவ்வோர் ஆண்டும் (2019 முதல்) குறிப்பிடத்தக்க ஆய்வு, திறனாய்வு என்று தமிழில் பங்களிப்பு செய்துள்ள ஆய்வாளர்க்கு வழங்கப்பட்டு வருகிறது.
இப்பரிசில் உருபா பத்தாயிரமும் சான்றிதழும் உள்ளடங்கியது.
விதிமுறைகள்:
1) இலக்கியம், இலக்கணம், மொழியியல், நுண்கலைகள், தமிழக வரலாறு, மானுடவியல், தொல்லியல், நாட்டுப்புறவியல், ஊடகவியல் முதலியன சார்ந்து நிகழ்த்தப்பட்ட திறனாய்வு மற்றும் ஆய்வு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
2) ஆய்வு நூல் 2020 சனவரி முதல் 2021 சனவரிக்குள் வெளிவந்திருக்க வேண்டும்.
3) நூல் ஒருபடி அனுப்பினால் போதும்.
4) நூற்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
5) தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.
6) 2021 - பிப்ரவரியில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெறும்.
நூல் அனுப்பவேண்டிய முகவரி :
கவிஞர் பாரதிபுத்திரன்
10, நான்காம் குறுக்குத்தெரு,
துர்கா காலனி,
செம்பாக்கம்,
சென்னை - 600073
தொ.பே: 9444234511
0 கருத்துகள்