இலக்கியப்பீடம் - மாம்பலம் சந்திரசேகர் இணைந்து நடத்தும் இலக்கியப்பீடம் வெள்ளிவிழா ஆண்டு சிறுகதைப் போட்டி!
சிறந்த சிறுகதைக்கு முதல் பரிசு ரூ.10,000/- சிறந்த சிறுகதைக்கு இரண்டாவது பரிசு ரூ.5,000/- சிறந்த சிறுகதைக்கு மூன்றாவது பரிசு சிறப்புப் பரிசாக ரூ.1000/- வீதம் 22 சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
* சிறுகதைப் போட்டிக்கு வரும் சிறுகதைகள் தேர்வு செய்யப்படாமற் போனால் அவற்றைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே, எழுத்தாள அன்பர்கள் தங்கள் கதைகளின் நகல்களை உடன் வைத்துக் கொண்டு அனுப்புதல் நலம்.
* சிறுகதைப் போட்டியின் முடிவு நடுவர் குழுவைச் சார்ந்தது. இதுதொடர்பாகக்கடிதப் போக்குவரத்தோ, தொலைப்பேசித் தொடர்போ தவிர்க்கப்படல் வேண்டும்.
* சிறுகதை தன் சொந்தக் கற்பனையில் உருவானது என்ற உறுதிமொழிக் கடிதம் இணைக்கப்பட்ட சிறுகதைகளே போட்டிக்குத் தகுதியுடையவை ஆகும்.
* சிறுகதைகள் முழு வெள்ளைத்தாள்களில் 8 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* சிறுகதைகள் 31.12.2020-ஆம் தேதிக்குள் இலக்கியப்பீடம்
அலுவலகத்திற்குக் கிடைக்க வேண்டும்.
சிறுகதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
இலக்கியப்பீடம்,
53 -D, பாரதிதாசன் காலனி, (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரிய
கே.கே.நகர், சென்னை - 600078; அலைப்பேசி: 900317527-
E-Mail: [email protected]
0 கருத்துகள்