பாரதி திருவிழா - 2020
“மகாகவி பாரதியாரின் பிறந்தநாளைக் கவிஞர் திருநாளாக வானவில் பண்பாட்டு மையம் 26 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறது. அந்தத் திருநாளில் உலகக் கவிஞர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியே உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி.
விதிகள்:
1. போட்டியில் கலந்துகொள்ளும் கவிஞர்களுக்கு வயது வரம்பு, நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை.
2. ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் அனுப்பும் கவிஞர்களின் கவிதைகள் அனைத்துமே போட்டியிலிருந்து விலக்கப்படும்.
3. கவிதைகள் (மரபு/புதுமை/பாடல்…) எந்த வடிவிலும் இருக்கலாம்.
4. கவிதை 200 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் மட்டுமே கவிதைகள் அமைதல் வேண்டும். கவிதையின் தலைப்பைக் குறிப்பிட வேண்டும்.
6. தனிமனிதரை அல்லது அரசியல், சாதி, மத, இனக் குழுவைப் புகழ்ந்தோ, இகழ்ந்தோ, விமர்சித்தோ, தேசப்பற்றுக்கு முரணாகவோ கவிதைகள் அமையக் கூடாது. அரங்க நாகரிகத்துக்கு எதிரான கவிதைகள் நிராகரிக்கப்படும்.
7. வானவில் பண்பாட்டு மையத்தின் இந்த வலைத்தளத்தில்(vanavilculturalcentre.com), கவிதைப் போட்டிக்கான பிரிவில் மட்டுமே போட்டிக் கவிதைகள் பதியப்பட வேண்டும்.
8. கவிதையைப் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்: 20 செப்டம்பர் 2020.
9. கவிதைப் போட்டி குறித்து, கடிதம்/மின்னஞ்சல்/தொலைப்பேசி போன்ற தொடர்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.
10. இந்த வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து, கவிதையைப் பிழையின்றித் தமிழில் தட்டச்சு செய்து, PDF ஆக பதிவிட வேண்டும்.
போட்டி நடைமுறை:
- தகுதிச் சுற்று, காணொலி (இணையம்) மூலம் நடத்தப்படும்
- போட்டிக்குப் பதிவாகும் கவிதைகளில் இருந்து தகுதிச் சுற்றுக்கான கவிதைகளை நடுவர் குழுவினர் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளை எழுதிய கவிஞர்களின் பெயர்ப்பட்டியலும், தகுதிச் சுற்றுக்கான நாள், நேரம் போன்ற விவரங்களும் எமது வலைத்தளத்திலேயே 15.10.2020 -க்குள் அறிவிக்கப்படும்.
- தகுதிச் சுற்றில் கலந்து கொள்ளத் தவறுவோரின் கவிதைகள் போட்டியிலிருந்து விலக்கப்படும்; கலந்து கொள்ளும் அனைவருக்கும் பாராட்டுப் பட்டயம் வழங்கப்படும். தகுதிச் சுற்றின்போது, நடுவர்கள் அழைக்கும் கவிஞர்கள், அவரவர் கவிதையை வாசிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
- நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
- தகுதிச் சுற்றில் தேர்வு பெறும் கவிதைகளே இறுதிச் சுற்றுக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இறுதிச் சுற்று, பாரதி பிறந்த திருநாளான டிசம்பர் 11 அன்றோ அல்லது அதையொட்டியோ அமையும். இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் கவிஞர்கள் அனைவருக்கும் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும்.
- முன்னணிக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் போன்ற பிரபலமானவர்கள் முன்னிலையில் போட்டிச் சுற்றுகள் நடைபெறும்.
போட்டிக்கான தலைப்புகள்
1. சுற்றி நில்லாதே போ பகையே
2. இருட்டில் ஏது நிழல்
3. யார் தந்த விளக்கு
4. தையலர் கருணையைப்போல்
5. கணம்தோறும் வியப்புக்கள்
உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி
முதல் பரிசு – ரூபாய். 25,000/-
இரண்டாம் பரிசு – ரூபாய். 15,000/-
மூன்றாம் பரிசு – ரூபாய். 10,000/-
கவிதைகள் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்: 20.09.2020
0 கருத்துகள்