யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற இப்போட்டி, தமிழ் நவீன இலக்கிய உலகில் முன்னோடிகளின் ஒருவரான க.நா.சு அவர்கள் பெயரில் க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி - 2020 என அறிவிக்கப்படுகிறது
சிறுகதையிளை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (Word Document) அனுப்ப வேண்டும். கையெழுத்து பிரதி மற்றும் (pdf) படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி [email protected]
நோக்கம்
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்த உலகத்தின் எல்லா நாடுகளையும்
அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றை ஒவ்வொரு தனிமனிதனும் சந்திக்க வேண்டிமிருக்கிறது. கொரோனாவின் நோய் தாக்கத்தை, தனிமைப்படுத்தப்பட்டமனிதர்களை, வறியவர்களின் இடப்பெயர்வை, எதிர்கால அச்சத்தை, பொருளாத வீழ்ச்சியை, அரசின் நடவடிக்கைகளை கதைகளின் வழி பதிவு செய்வது.
விதிமுறைகள்
* இந்தச்சிறுகதை போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
(குறுநாவல் போட்டியில் கலந்து கொள்பவர்களும், சிறுகதைப் போட்டியிலும்
கலந்து கொள்ளலாம்)
சிறுகதையின் மையம் கொரோனா(Corana - COVID - 19 ) பாதிப்பைச் சுற்றிலும் மட்டுமே இருத்தல் வேண்டும். சிறுகதையானது யதார்த்தம், மாய யதார்த்தம், அறிவியல்புனைவு என எவ்வகையிலான கதையாகவும் இருக்கலாம்.
* ஒருநபருக்கு ஒரு சிறுகதை ஒரு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது கதை அளவு அதிகபட்சம் 2000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்.
படைப்பினை அனுப்புவதற்கு கடைசி நாள் ஜூன் 31 ஆம் தேதி, 2020.
உறுதிமொழி
* போட்டி முடிவு வெளியாகும் வரை நடுவர்கள் யார்எனக் கண்டறிவது,அவர்களோடு. தொடர்புகொள்வது என எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.
* படைப்பை அனுப்பியதில் இருந்து, போட்டி முடிவுவெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ அல்லதுஅச்சிற்க்கோ அல்லது டிஜிட்டல் வடிவிடலா ஏற்கனவே அச்சிலோ. மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என அனுப்புவதாக இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டும்.
மேலும் படைப்பானது தனது சொந்த கற்பனையில் உருவானது என்றும் அது, எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழியும், எவ்வித பொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியும் இணைத்திருக்க வேண்டும்.
தேர்வும், பரிசும்
* இப்போட்டியின் முடிவில் மொத்தம் 10 சிறுகதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும்ஒவ்வொரு சிறுகதைக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். நடுவர்கள் பத்துக்குர் குனறவான சிறுகவதைகளையேபரிசுக்குரியன எனத் தேர்ந்தெடுத்தால், அவற்றுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும். அறிவிப்பின்படியான மிச்சத் தொகை, அடுத்த போட்டிக்குரிய தொகையுடன் இணைக்கப்படும். “புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி - 2020” பரிசு வழங்கும் விழாவில் சிறுகதைகளுக்கான “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி - 2020"க்கான பரிசும் வழங்கப்படும்.நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைத் தொகுப்பை யாவரும் பப்ளிஷர்ஸ் நிறுவனம்வெளியிடும்.
8 கருத்துகள்
"ஒருநபருக்கு ஒரு சிறுகதை ஒரு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது கதை அளவு அதிகபட்சம் 2000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்"
பதிலளிநீக்குஇதை 2000 வார்த்தைகள் கொண்ட கதைகள் தான்
போட்டியில் எடுத்துக் கொள்ளப்படும் அல்லது அதிகபட்சம் 2000 வார்த்தைகளுக்குள் தான் இருக்க வேண்டும். எப்படி புரிந்து கொள்வது?
எனக்கும் இந்தக் கேள்வி உள்ளது. குறைந்தபட்சம் எவ்வளவு என்றும் குறிப்பிட்டிருக்கலாம்.
நீக்குஇதன் முடிவு எப்போது வரும்
பதிலளிநீக்குhttps://www.senkani.com/2020/10/Ka-na-su-contest-result.html
நீக்குஇந்த போட்டியின் முடிவு எப்போது வரும்?
பதிலளிநீக்குhttps://www.senkani.com/2020/10/Ka-na-su-contest-result.html
நீக்குintha pottiyin mudivu vanthuvittatha..
பதிலளிநீக்குhttps://www.senkani.com/2020/10/Ka-na-su-contest-result.html
நீக்கு