தேனித் தமிழ்ச் சங்கம் நடத்தும் ‘தேன் துளிகள்’ கவியரங்கத்தின் இரண்டாவது தலைப்பான ‘முதுமையைப் போற்றுவோம்...!’ எனும் தலைப்பில், வருகிற 23-11-2019, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தேனி, பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள மாயா புத்தக நிலையம், மேல் தளத்தில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் முனைவர் மா. துரை என்கிற கவிஞர் மதுரன் தலைமையில் நடைபெற இருக்கிறது.
இக்கவியரங்கத்தைத் திருநெல்வேலி, பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ‘தமிழ்ச்செம்மல்’ கவிஞர் பேரா என்கிற பே. ராஜேந்திரன் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார். கவியரங்கில் பாடப்பெறும் கவிதைகளிலிருந்து பரிசுக்குரிய மூன்று கவிதைகளைத் தேர்வு செய்து பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், பங்கேற்ற கவிஞர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்திட மதுரை, கவிஞர் இளவல் ஹரிஹரன் அவர்களும் வருகை தருகிறார்.
இக்கவியரங்கில் பங்கேற்கத் தாங்கள் கவிதையை அனுப்பி விட்டீர்களா...? இதுவரை அனுப்பாதவர்கள்... ‘முதுமையைப் போற்றுவோம்...!’ எனும் தலைப்பில் தங்கள் கவிதையினை 24 வரிக்கு அதிகமாகதபடி எழுதி, [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது ஒரு தாளில் எழுதி அதனைப் படமாக்கி 9952894807 எனும் புலனம் (WhatsApp) எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.

நன்றி : தேனி மு.சுப்பிரமணி
0 கருத்துகள்